பா.ஜ.க. எம்.பி.யும், நடிகையுமான கங்கனா ரணாவத், நாடாளுமன்றத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) மீதான விவாதத்தின்போதுக் காங்கிரஸைக் காட்டமாக விமர்சித்தது இணையத்தில் வைரலாகி வருகிறது.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையைச் சினிமா தியேட்டர் போல் மாற்றிவிடுவதாகவும், பிரதமர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை (EVM) ஹேக் செய்யவில்லை, மக்களின் இதயங்களை ஹேக் செய்துவிட்டார் என்றும் அவர் பேசினார்.

ஹரியானா தேர்தலில் முறைகேடு நடந்ததாகக் கூறி, எந்த ஆதாரமும் இல்லாமல் ஒரு வெளிநாட்டு மாடல் பெண்ணின் புகைப்படத்தை எதிர்க்கட்சியினர் சபையில் காட்டியதற்குக் கங்கனா கண்டனம் தெரிவித்தார்.

அந்தப் பெண், தனக்கும் இந்தியத் தேர்தல்களுக்கும்ச் சம்பந்தமில்லை என்றுப் பலமுறை விளக்கமளித்தும், அவரது புகைப்படத்தை அவையில் காட்டியதற்காக, “ஒரு பெண்ணாக, மற்றொரு பெண்ணின் கண்ணியத்தை நான் மதிக்கிறேன். இவர்கள் சார்பாக நான் அந்தப் பெண்ணிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்” என்றும் கூறினார்.

மேலும், “பழைய விஷயங்களை விடுங்கள்” என்றுப் பேசியப் பிரியங்கா காந்தியிடம், “உங்கள் தாயார் சோனியா காந்தி, 1983-ஆம் ஆண்டுதான் இந்தியக் குடியுரிமை பெற்றார், ஆனால் அதற்கு முன்பே வாக்களித்தார்” என்றும், “உங்கள் குடும்பம் நாட்டின் சட்ட ஒழுங்கை மதித்ததில்லை” என்றும் கங்கனா காட்டமாகப் பேசினார்.