பிரபலவிஜய் தொலைக்காட்சியில்ஒளிபரப்பாகும்  நீயா நானாவில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே தொகுப்பாளர் கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார். இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரொமோ காட்சிகள் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்தவகையில் இந்த வாரம் அழகு கலையை  ஆதரிப்பவர்கள் மற்றும் அதை விமர்சிப்பவர்கள் இருவருக்கும் இடையே வாதம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தற்போது இருக்கும் நவீன வளர்ச்சி மாற்றத்திற்கு ஏற்ப நடிகைகள் தொடங்கி பேஷன் டிசைன் செய்பவர்கள் வரை தன்னுடைய முகத்தை வடிவமைத்து கொள்கிறார்கள் என்று பேசப்பட்டது. அதில் ஒருவர், அழகு கலை நிபுணர்கள் நீங்கள் ஏதாவது செய்து கொண்டு தான் கிளினிக்கை விட்டு வெளியே போக வேண்டும் என்று கூறவில்லை என்று கூறியிருக்கிறார். இந்த வாதம் அழகு கலையை எதிர்ப்பவர்களுக்கு ஒரு அடியாக போய் விழுந்துள்ளது. இதை ப்ரோமோவில் பார்த்த இணையவாசிகள் நீயா நானா அரங்கம் இந்த வாதத்தால் அதிர போகிறது என்று கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.