உங்களை நீங்களே அழிக்கும் கொடிய விஷம்: கோபத்தை அடக்கி வெற்றிக்கனியை பறிப்பது எப்படி? சாணக்கியரின் அதிரடி ‘டிப்ஸ்’!
”மனிதனின் மிகப்பெரிய எதிரி அவனது கோபமே” – இதைச் சொன்னவர் மாபெரும் அறிஞர் ஆரிய சாணக்கியர். ஒருவருக்குக் கோபம் வரும்போது அவர் என்ன செய்கிறோம் என்று தெரியாமலேயே தனக்குத்தானே பெரிய ஆபத்தை ஏற்படுத்திக்கொள்கிறார். பின்னர் காலம் கடந்த பிறகு வருத்தப்படுவதால் எந்தப் பயனும் இல்லை. ஒரு மனிதனிடம் ‘நிதானம்’ (Patience) என்கிற ஆயுதம் மட்டும் இருந்தால், அவன் உலகத்தையே வெல்ல முடியும் என்கிறார் சாணக்கியர். குறிப்பாக ஒரு முக்கியமான விஷயத்தைப் பேசும்போதும் அல்லது ஒரு பெரிய முடிவை எடுக்கும்போதும் கோபத்தை அறவே தவிர்க்க வேண்டும்.
சாணக்கியர் தரும் எச்சரிக்கையின்படி, கோபத்தில் எடுக்கப்படும் 99 சதவீத முடிவுகள் தோல்வியில்தான் முடிகின்றன. அதேபோல், குழந்தைகள் மற்றும் நம்மை விட பலவீனமானவர்களிடம் கோபத்தைக் காட்டுவது நம்முடைய தார்மீகத் தோல்வியாகும். குறிப்பாகக் குழந்தைகளிடம் கோபத்தைக் காட்டினால் அது அவர்களின் எதிர்காலத்தையே சிதைத்துவிடும். எனவே, வெற்றியை அடையத் துடிப்பவர்கள் முதலில் தங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தக் கற்றுக் கொள்ள வேண்டும். பதற்றம் இல்லாத அமைதியான மனநிலையே உங்களைச் சரியான பாதையில் அழைத்துச் செல்லும் என்பது சாணக்கியரின் அசைக்க முடியாத விதி!
