EPFO உறுப்பினர்கள் அவர்கள் பணியில் இருந்து ஓய்வுபெறும் தேதியில் மட்டுமே ஓய்வூதியம் செலுத்தும் உத்தரவை (பிபிஓ) பெறமுடியும். இதன் கீழ் EPFO​-ன் அனைத்து பிராந்திய அலுவலகங்களும் மாதாந்திர வெபினாரை பிரயாஸ் ஒரு பிபிஓவை ஓய்வு பெறும் நாளில் வெளியிடுவதற்கான முயற்சியை ஏற்பாடு செய்கிறது. பிபிஓ என்பது ஒரு தனித்துவமான 12 இலக்க எண் ஆகும். இதை வைத்து ஓய்வூதியம் பெறுபவர்கள் தங்களது ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்ள இயலும். வருடந்தோறும் சமர்ப்பிக்க வேண்டிய ஆயுள் சான்றிதழ் உடன், பிபிஓ எண்ணும் முக்கியமானது. தற்போது ஒருவரது பிபிஓ எண்ணை தெரிந்துகொள்வது எப்படி என்பதை நாம் தெரிந்துகொள்வோம்.

# அதிகாரப்பூர்வமான  இணையதளத்தில் உள் நுழையவும்.

# ஓய்வூதியதாரரின் போர்ட்டலுக்கு செல்லவும்.

# உங்களது பிபிஓ எண்ணை அறிந்துகொள்ளுங்கள் என்பதனை கிளிக் செய்யவும்.

# பிஎப் எண்ணின் வங்கிக்கணக்கு எண்ணை சமர்ப்பிக்கவும்.

# தற்போது சமர்ப்பி என்பதனை கிளிக் செய்ததும், உங்களது பிபிஓ எண்ணை பெற்றுக் கொள்ளலாம்.

EPFO, ஓய்வு பெறக்கூடிய ஊழியருக்கு கடிதத்தின் வாயிலாக பிபிஓ எண்ணை அனுப்பும். இந்த பிபிஓ எண் ஓய்வுபெற்ற (அ) ஓய்வுபெறும் நிலையில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் முக்கியமான ஒரு ஆவணம். மத்திய ஓய்வூதிய கணக்கியல் அலுவலகம் (சிபிஏஓ) உடனான எந்த ஒரு தொடர்புக்கும் பிபிஓ எண் ஒரு குறிப்பு புள்ளியாக செயல்படுகிறது.