குளிர் அலை வீசி வருவதால் பஞ்சாப், ஹரியானா, சண்டிகர்,டெல்லி மற்றும் உத்தர பிரதேசம் மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. ராஜஸ்தான் மற்றும் பீகார் மாநிலங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குளிர் அலை மற்றும் மோசமான மூடு பணியால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடமாநிலங்களில் ஜனவரி பத்தாம் தேதி முதல் குளிர் குறையும் என்ற இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் கடும் குளிர் காற்று வீசுவதால் மாணவர்களுக்கு அரசு விடுமுறை அறிவித்துள்ளது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளை ஜனவரி 14-ஆம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விடுமுறைகள் ஐந்தாம் வகுப்புக்கு கீழ் உள்ள மாணவர்களுக்கு மட்டுமே எனவும் ஐந்தாம் வகுப்புக்கு மேல் உள்ள மாணவர்களுக்கு வகுப்புகள் தொடரும் எனவும் அரசு பள்ளிகளில் குழந்தைகளுக்கு மதிய உணவு தொடரும் எனவும் தெரிவித்துள்ளது..