ரூபாய் நோட்டுகளில் பேனா மூலம் எழுதி இருந்தால் அவை செல்லாது என ஒரு பேச்சு எழுகிறது. இதன் காரணமாக எழுதப்பட்ட ரூபாய் நோட்டுகளை சிலர் கடைகளில் வாங்க மறுக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இந்நிலையில் PIB இச்செய்தி குறித்த அதன் உண்மை சரிபார்ப்பில், இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அத்தகைய புது வழிகாட்டுதல்கள் என எதுவுமில்லை என்று அதனை முற்றிலுமாக மறுத்தது.

ஆகவே எழுத்துகள் இருக்கும் ரூபாய் நோட்டுகளானது  செல்லும் எனவும் அவை தொடர்ந்து சட்டப்பூர்வமாக பயன்படுத்தலாம் என்பதையும் PIB உறுதி செய்கிறது. இதற்கிடையில் அவை செல்லுபடியாகாது என கடைகளும், வங்கிகளும் அவற்றை வாங்க மறுக்க முடியாது என உறுதிப்படுத்தியுள்ளது. எனினும் பேனா மூலம் எழுதுவது நோட்டுகளை சிதைத்து அதன் ஆயுளைக் குறைக்கும் என்பதால், அவற்றில் எழுத வேண்டாம் என மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் எனவும் PIB அறிவுறுத்தியுள்ளது.