நாட்டின் மிகப் பெரிய தனியார் துறை வங்கியான ICICI, தன் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளது. அதன்படி ICICI வங்கி தன் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் இப்போது பிக்ஸ்ட் டெபாசிட் விகிதங்களின் வட்டிவிகிதங்களை அதிகரிக்க முடிவுசெய்தது. அத்துடன் மொத்த FD-களில் இந்த அதிகரிப்பு செய்யப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில் ICICI வங்கி ரூபாய்.2 கோடி முதல் ரூ.5 கோடி வரையிலான மிகப் பெரிய பிக்ஸட் டெபாசிட் கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியிருக்கிறது.

பிக்ஸட் டெபாசிட் கணக்குகளின் வட்டி விகிதங்களை அதிகரித்தது தொடர்பாக அந்த வங்கி தன் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் புது விகிதங்களை பற்றி தெரிவித்து உள்ளது. இந்த திருத்தின் அடிப்படையில் வாடிக்கையாளர்கள் 7 முதல் 10 வருடங்களில் முதிர்ச்சி அடையும் எஃப்டிகளுக்கு 4.50 சதவீதம் முதல் 6.75 சதவீதம் வரையிலான வட்டியை பெறுவார்கள். அதே சமயத்தில் அதிகபட்ச வட்டி விகிதம் 15 மாதங்கள் முதல் 2 வருடங்கள் வரையிலான FD-களுக்கு 7.15% வட்டியை பெறுவார்கள்.

ICICI வங்கி மொத்த எஃப்டிக்கான விகிதங்கள்

# 7-29 நாட்கள் வரை-4.50%

# 30-45 நாட்கள் வரை-5.25%

# 46-60 நாட்கள் வரை – 5.50%

# 61-90 நாட்கள் வரை- 5.75%

# 91 -184 நாட்கள் வரை-6.25%

# 185 -270 நாட்கள் வரை-6.50%

# 271 நாட்கள் முதல் 1 ஆண்டு வரை-6.65%

# 1 ஆண்டு முதல் 15 மாதங்கள் வரை-7.10%

# 15 மாதங்கள் -2 ஆண்டுகள் வரை-7.15%

# 2 வருடங்கள் 1 நாள் முதல் 3 ஆண்டுகள் வரை-7%

# 3 வருடங்கள் 1 நாள் முதல் 10 வருடங்கள் வரையிலும்-6.75%