
கடலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உருக்கமான மற்றும் உணர்ச்சிபூர்வமான உரையொன்றை நிகழ்த்தினார். “நான் கடந்த 46 ஆண்டுகளில் 96,000 கிராமங்களுக்கு பயணம் செய்துள்ளேன்.
இரவு காலையிலேயே கூழ் குடித்து, சத்தமில்லாமல் தண்ணீரில் கரைத்துக்கொண்டு பயணத்தைத் தொடர்ந்தேன். அதிகாலை 3 மணிக்கு சென்று, மதியம் சாப்பிட மாலை 5 மணிக்கே சாப்பாட்டிற்கும் சென்றேன். இவ்வளவு பசியுடன் உங்களுக்காக நான் உழைத்தேன் “உங்களுக்காக சாப்பிடாமல் என் பசியை அடக்கினேன்”. ஆனால், அதற்கும் மேலாக ஒரு ஓட்டு கேட்கவே முடியவில்லை” என உருக்கமாக தெரிவித்தார்.
இந்த தேர்தலில் பணம் கொடுத்து ஓட்டு வாங்கும் கலாசாரம் பெரிதும் பரவிவருவதாகவும், இது சமூகத்திற்கே களங்கம் எனவும் ராமதாஸ் விமர்சித்தார். “இரண்டு ஆயிரம் ரூபாய் கொடுத்து ஓட்டு வாங்குகிறார்கள். மறுபடியும் அது வரும், மீண்டும் வரும், மீண்டும் வரும் என்று பொய்களைச் சொல்லிக்கொண்டு இவர்கள் மக்களிடம் வாக்குகளை வாங்குகிறார்கள். இனி இது நடக்கக்கூடாது. மக்கள் உணர்வுடன் சிந்தித்து வாக்களிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது,” என்றார்.

தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை மக்களுக்காகவே அர்ப்பணித்துள்ளதாகவும், தமது பயணத்தின் நோக்கம் பணம் சம்பாதிக்க அல்ல, மக்கள் நலன் என்று ராமதாஸ் வலியுறுத்தினார். “நமக்குப் பணம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. ஆனா, உங்கள் பிள்ளைகள் படிக்க வேண்டும், உங்கள் பேரன்கள் கலெக்டர், டாக்டர் ஆக வேண்டும். அந்த எதிர்காலத்தை பாதுகாக்கத்தான் ஓட்டு அவசியம்” என தாய்மார்களை நோக்கி உரைத்தார்.
அத்துடன், பெண்கள் சமுதாயத்தில் பெரும்பான்மையாக உள்ளதால், அவர்கள் மாற்றத்தை கொண்டு வரக்கூடிய மிகப்பெரிய ஆற்றலுடையவர்கள் என்று கூறிய அவர், “நீங்கள் மெஜாரிட்டி. நாங்க ஆண்கள் மைனாரிட்டி. நீங்கள் விருப்பப்பட்டால் இந்த சமுதாயத்தை மாற்றி அமைக்கலாம். இந்த தேர்தலில் உங்கள் மான உணர்வையும், உங்கள் புத்திசாலித்தனத்தையும் நிரூபிக்கவேண்டும்,” எனக் கேட்டுக்கொண்டார்.
மேலும், தேர்தல் நேரத்தில் ஓட்டு கேட்கும் பாமக வேட்பாளர் வீட்டுக்குப் போய்ச் தூங்க சொல்லுங்கள் , ஐயா கூறிவிட்டேன் நீ வெற்றி பெறுவாய் என்று கூறுங்கள் பாமக வேட்பாளர் வெளியில் வந்து ஓட்டு கேட்பது எங்களுக்கு அசிங்கம் என்று தாய்மார்கள் சொல்லவேண்டும் ,. நம்மிடம் மானம் இருக்கிறது. நம்மை காசுக்கு விற்கக்கூடாது,” என அவர் அழுத்தமாக கூறினார்.
தனது 87வது வயதிலும் மக்களுக்காக கத்திக்கொண்டிருப்பதாக கூறிய ராமதாஸ், “இந்தத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் யாரோ அவருக்கு உங்கள் வாக்குகளைத் தாருங்கள். பணத்துக்கு ஓட்டுப் போடாதீர்கள். உங்கள் எதிர்காலம், உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் ஒளிமயமாக இருக்க வேண்டுமானால், இதுதான் சரியான நேரம். உங்கள் ஓட்டு தான் மாற்றத்தை ஏற்படுத்தும்,” என உரையினை முடித்தார்.