தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாகி, மாணவர்களின் நீண்ட நாள் காத்திருப்பு ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது. இந்த ஆண்டு ஒட்டுமொத்தமாக 95.20 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

வழக்கம்போலவே இந்த முறையும் “நாங்கதான் கெத்து” எனச் சொல்லும் வகையில், 97 சதவீத மாணவிகள் தேர்ச்சி பெற்று மாணவர்களை (93.19%) விட 3.81% அதிகமாகப் பெற்று அசத்தியுள்ளனர். தமிழகம் முழுவதும் மொத்தம் 3,47,527 மாணவர்கள் தங்களது வெற்றிப் பயணத்தைத் தொடங்கியுள்ளனர்.

மாவட்ட வாரியான தேர்ச்சியில், 98.07 சதவீதத்துடன் ஈரோடு மாவட்டம் முதலிடத்தைத் தட்டிச் செல்ல, சிவகங்கை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்து மிரட்டியுள்ளன. தேர்தல் பரபரப்பு, ஆட்சி மாற்றம் என ஒரு பக்கம் அரசியல் அனல் பறந்தாலும், இன்று மாணவர்களின் இந்த ‘வெற்றிச் செய்தி’ தான் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் முதலிடம் வகித்து வருகிறது.