ஈரானுடன் ஏற்பட்டுள்ள போர் சூழலால் அமெரிக்காவில் பெட்ரோல் விலை உயர்ந்து, பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் வேலைவாய்ப்பு சந்தையில் பெரிய மந்தநிலை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், கடந்த ஏப்ரல் மாதத்தில் வியக்கத்தக்க வகையில் 1 லட்சத்து 15 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன. மார்ச் மாதத்தில் 1 லட்சத்து 85 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவான நிலையில், போரினால் ஏப்ரலில் இது வெறும் 65 ஆயிரமாகக் குறையும் என்று கணிக்கப்பட்டது.
ஆனால், கணிப்புகளை மீறி வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளது அமெரிக்க பொருளாதாரத்திற்கு ஒரு நல்ல அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது தற்போது அமெரிக்காவில் வேலையின்மை விகிதம் 4.3 சதவீதம் என்ற அளவிலேயே நீடிக்கிறது. போரினால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகள் இன்னும் வேலைவாய்ப்பு சந்தையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதையே இந்த புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
ஊதிய செயலாக்க நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த அறிக்கை, போர் பதற்றத்திற்கு மத்தியிலும் அமெரிக்க வேலை சந்தை ஓரளவுக்கு வலுவாக இருப்பதையே உறுதிப்படுத்துகிறது. இருப்பினும், பொருளாதார மந்தநிலை நீடிப்பதால் வரும் காலங்களில் இதன் தாக்கம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
