மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வரும் வேளையில், அமெரிக்காவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய வெடிப்புச் சம்பவம் அந்நாட்டையே அதிரச் செய்துள்ளது. ஈரான்-இஸ்ரேல் மோதலுக்கு இடையே, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஐந்து நாட்களுக்குப் போர் நிறுத்தத்தை அறிவித்திருந்தார்.

இருப்பினும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை எச்சரிக்கும் வகையில் ஈரான் தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில், அமெரிக்காவின் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் நிகழ்ந்த இந்த விபத்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து, அங்குள்ள பொதுமக்களுக்கு அரசு உயர்மட்ட எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் பாதுகாப்பு கருதி உடனடியாக அப்பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஈரான் உடனான போர்ச் சூழலில் அமெரிக்கா ஏற்கனவே சிக்கியுள்ள நிலையில், உள்நாட்டில் நிகழ்ந்துள்ள இந்த விபத்து ட்ரம்ப் நிர்வாகத்திற்குப் பெரும் சவாலாகவும் பின்னடைவாகவும் பார்க்கப்படுகிறது. மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பொதுமக்கள் வீடுகளிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.