மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் ஈரான் – இஸ்ரேல் இடையிலான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்க ராணுவ வீராங்கனை ஒருவர் அழுதபடி போர் நிறுத்தத்தை வலியுறுத்தும் வீடியோ இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், ராணுவ சீருடையில் இருக்கும் ஒரு பெண், கண்ணீருடன் தனது குமுறலை வெளிப்படுத்துகிறார். அதில் அவர் பேசியிருப்பதாவது, யுத்தம் என்பது எங்களது விருப்பம் அல்ல. தயவுசெய்து இதை முடிவுக்குக் கொண்டு வாருங்கள்.
நாங்கள் மிகவும் சோர்வடைந்துவிட்டோம். எங்களுக்கு வீட்டுக்குச் செல்ல வேண்டும். எனது குடும்பத்தினரை நான் மிகவும் மிஸ் செய்கிறேன். ஒவ்வொரு நாளும் அவர்களைச் சந்திக்க ஏங்குகிறேன். ஆனால், தேசத்திற்காக இன்னும் நான் இங்கேயே போர்க்களத்தில் இருக்கிறேன் என்றார். இந்த உருக்கமான வீடியோ உலகெங்கும் உள்ள இணையவாசிகளைப் போரின் கோர முகத்தை நோக்கித் திருப்பியுள்ளது.
கடந்த பிப்ரவரி 28, 2026 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து ‘ஆபரேஷன் ஏபிகே ஃபியூரி’ திட்டத்தின் கீழ் ஈரான் மீது தாக்குதலைத் தொடங்கின. இன்றும் நீடித்து வரும் இந்தப் போர் எப்போது முடியும் என்பது குறித்து எந்தத் தெளிவும் இல்லாத நிலையில், இந்த வீராங்கனையின் வீடியோ பேசுபொருளாகியுள்ளது.
இந்த வீடியோவின் நம்பகத்தன்மை குறித்து இணையத்தில் பெரும் விவாதம் கிளம்பியுள்ளது. இது குறித்துப் பயனர்கள் தெரிவித்துள்ள கருத்துகள், ஒரு தரப்பினர், “இது பார்ப்பதற்குச் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ போலத் தெரிகிறது. இதன் உண்மைத்தன்மை குறித்துச் சந்தேகம் உள்ளது” எனப் பதிவிட்டுள்ளனர்.
மற்றொரு தரப்பினர், “எந்தவொரு நாட்டின் ராணுவ வீரரும், குறிப்பாகப் போர் காலங்களில், சீருடையுடன் இதுபோல ரகசியமாக வீடியோ எடுத்து வெளியிடுவது ராணுவ விதிகளுக்கு எதிரானது. வீரன் ஒருவன் போர்க்களத்தில் அழுவதை யாரும் ஏற்க மாட்டார்கள். இது போலியானதாக இருக்கலாம் என எச்சரித்துள்ளனர். தவறான தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதால் மக்கள் மற்றும் வீரர்கள் பல ஆண்டுகள் துயரத்தை அனுபவிக்க வேண்டியுள்ளது எனச் சிலர் வேதனை தெரிவித்துள்ளனர். இருப்பினும், இந்த வீடியோ லட்சக்கணக்கானோரால் பகிரப்பட்டு வருவதுடன், உலக அமைதி குறித்த விவாதத்தையும் மீண்டும் முன்னெடுத்துள்ளது.
एक अमेरिकी 🇺🇲 महिला सैनिक ने भावुक होकर कहा:
"हम बहुत थक चुके हैं। यह युद्ध हमारी चाहत नहीं थी, न ही हमने इसे चुना था।मेरी बस एक ही इच्छा है—घर वापस जाना।
मुझे युद्ध नहीं चाहिए… मुझे तो बस शांति चाहिए।"— Shaikh Javed (@ShaikhSahab__) April 5, 2026
