விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்றுதான் ஈரமான ரோஜாவே 2. இந்த சீரியலில் திரவியம் ராஜகுமாரன், கேப்ரில்லா, சித்தார்த் குமரன் மற்றும் சுவாதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். அதே சமயம் இந்த சீரியலில் இரண்டு மகன்களுக்கு அம்மாவாக பிரியா மற்றும் காவியாவுக்கு மாமியாராக பார்வதி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர்தான் நடிகை மீனா வேமுரி.

இவர் சீரியலில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வருகிறார். தற்போது வாக்கிங் செல்லும் போது எடுக்கப்பட்ட ஒரு வீடியோவை அவர் பகிர்ந்து உள்ள நிலையில் மேக்கப்புடன் வியர்வை வடிய மூச்சு வாங்க இருக்கிறார். இதனைப் பார்த்த இணையவாசிகள் சீரியல் நன்றாக தானே செல்கிறது அதுக்குள்ள இது போன்ற விபரீத விளையாட்டுக்கள் தேவையா என கலாய்த்து வருகிறார்கள்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Meena Vemuri இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@meenavemuri)