தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர்தான் நடிகர் விஷால். இவரின் நடிப்பில் நேற்று வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் விஷால் திரைப்படங்களில் நடிப்பதுடன் சேர்த்து பல சமூகப் பணிகளையும் செய்து வருகின்றார்.

இந்த நிலையில் சமீப காலமாக பல பிரபலங்களின் சொத்து விவரங்கள் குறித்த தகவல் வெளியாகி வரும் நிலையில் தற்போது ஹீரோவாக இருக்கும் விஷால் இடம் 120 கோடி ரூபாய் சொத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் ஒரு படத்திற்காக 11 முதல் 15 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குவதாக சொல்லப்படும் நிலையில் சென்னையில் சொந்தமாக வீடு, 76 லட்சம் மதிப்புள்ள பிஎம்டபிள்யூ எக்ஸ்5, 35 லட்சம் ரூபாய் மதிப்பிலான Toyota fortuner போன்ற விளைவு உயர்ந்த கார்களை சொந்தமாக வைத்துள்ளார்.