சமூக வலைத்தளங்களில் எக்ஸ் (X) தளத்தில் தற்போது ஒரு காணொளி வெளியாகி, அதைப் பார்க்கும் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்தக் காணொளியில், ஒரு பெண் திடீரென ஒரு உயரமான பாலத்தின் (பிரிட்ஜ்) விளிம்பில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்கிறார். ஆனால், எதிர்பாராத திருப்பமாக, அங்கேயே இருந்த ஒரு டாக்ஸி ஓட்டுநர், அந்தப் பெண் குதித்த மறுகணமே சட்டென நகர்ந்து, துணிச்சலுடன் கீழே தொங்கிக்கொண்டிருந்த அப்பெண்ணின் தலைமுடியைப் பிடித்துக் கொள்கிறார்.

டாக்ஸி ஓட்டுநர் அந்தப் பெண்ணின் தலைமுடியை இறுக்கமாகப் பிடித்தபடி கத்த, உடனடியாக அங்கிருந்த காவல்துறையினரும் விரைந்து வந்து, அந்தப் பெண்ணைக் காப்பாற்ற உதவுகின்றனர். பலரின் கூட்டு முயற்சியால், தற்கொலைக்கு முயற்சி செய்த அந்தப் பெண் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.

இந்தச் சம்பவத்தை விவரிக்கும் காணொளியானது சமூக வலைத்தளங்களில் வெளியாகி தீவிரமாகப் பரவி வருகிறது. டாக்ஸி ஓட்டுநரின் சாமர்த்தியத்தையும், சரியான நேரத்தில் செயல்பட்ட காவல்துறையினரின் மனிதநேயத்தையும் பலரும் பாராட்டி வருகின்றனர்.