இந்தியாவிலிருந்து இலங்கை செல்ல விசா தேவையில்லை என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது. இந்தியா , சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு மட்டுமே விசா தேவை இல்லை. சோதனை முயற்சியாக மார்ச் 31 வரை இந்த திட்டத்தை அமல்படுத்த அந்நாட்டு அமைச்சராவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து திட்டத்தில் மாற்றம் இருக்கும் என தெரிகிறது.