ஐஐடி கரக்பூர் பேராசிரியர் அரவிந்த் ரௌட்ரே, தனது பிறந்தநாளை மாணவர்களுடன் மிக எளிமையான முறையில் கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி பலரது மனங்களையும் நெகிழச் செய்துள்ளது. வழக்கமாக பிறந்தநாள் என்றாலே பெரிய ஹோட்டல்களில் விருந்து வைப்பார்கள், ஆனால் இந்தப் பேராசிரியர் தனது மாணவர்களுக்காக ஒரு தோட்டத்தில் எளிய முறையில் விருந்து அளித்துள்ளார்.
<a href=”http://
View this post on Instagram
“>
அந்த வீடியோவில், அவரே முன்னின்று மாணவர்களுக்குத் தட்டுகளை வழங்கி, தன் கைகளாலேயே உணவு பரிமாறுவதைக் காண முடிகிறது. இந்த விருந்தில் பூரி, பாஸ்தா, சாதம், பருப்பு மற்றும் ஐஸ்கிரீம் போன்ற உணவுகள் மாணவர்களுக்கு அன்புடன் பரிமாறப்பட்டன. மாணவர்கள் பலரும் தரையில் அமர்ந்தபடி இந்த உணவை மகிழ்ச்சியுடன் ரசித்து உண்டனர்.
ஆசிரியர் – மாணவர் உறவுக்கு ஒரு சிறந்த உதாரணமாகத் திகழும் இந்த வீடியோவைப் பார்த்த பலரும் பேராசிரியரின் எளிமையைப் பாராட்டி வருகின்றனர். “இது போன்ற நல்ல பேராசிரியர்கள் கிடைப்பது வரம்” எனப் பல முன்னாள் மாணவர்களும் நெகிழ்ச்சியுடன் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
