தமிழக முதலமைச்சரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், சென்னை அண்ணா நகரில் உள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். வைகோவின் இல்லத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் விஜய்யை, வைகோவின் மகனும் மதிமுக தலைமை நிலையச் செயலாளருமான துரை வைகோ உற்சாகமாக வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார்.

​இந்தச் சந்திப்பின் போது, வைகோ தனது குடும்பத்தினர் மற்றும் வீட்டில் பணிபுரியும் பெண்களை முதலமைச்சர் விஜய்க்கு அறிமுகம் செய்து வைத்தார். அப்போது துரை வைகோ, “இவர்கள் அனைவரும் கடந்த தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் ‘விசில்’ சின்னத்திற்கு வாக்களித்தவர்கள்” என்று பெருமையுடன் கூறினார்.

இதைக் கேட்டு நெகிழ்ந்த முதல்வர் விஜய், அந்தப் பெண்களுடன் சிறிது நேரம் உரையாடி அவர்களுக்குத் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். இந்த நெகிழ்ச்சியான சந்திப்பு தொடர்பான புகைப்படங்களும் தகவல்களும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.