இளைஞர்கள் மத்தியில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது ஆப்பிள் நிறுவனம். அதாவது டைனமிக் ஐலேண்ட் தொழில்நுட்பத்துடன் புதிய ஐபோன் 15 சீரிஸ் வெளியிடப்பட்டுள்ளது. பல புதிய அம்சங்களுடன் களமிறங்கியுள்ள iphone 15ல் பெரிய டிஸ்ப்ளே, சாப்ட்வேர், பேட்டரி, கேமரா, டிசைன் என அனைத்து தரப்பும் மேம்படுத்தப்பட்டுள்ளது.

பயனர்கள் மொபைல் போனை மிகவும் எளிதாக கையாளும் வகையில் UI சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கேமிங் விரும்பிகளுக்கு இந்த iphone 15ல் புதிய அனுபவம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.