உலகம் முழுவதுமே பில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் பயனர்களுடைய வசதிக்காக whatsapp பல்வேறு சேவைகளையும், அப்டேட்டுகளையும் வழங்கி வருகிறது. கல்வி, தொழில், பண பரிமாற்றும் முதலான அனைத்து தேவைகளுக்கும் whatsapp பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பயனாளர்களுக்கு ஒரு புது வசதியை கொண்டுவந்துள்ளது வாட்ஸ்ஆப். அந்தவகையில்  போட்டோவை மட்டும் இது வரை அனைவரும் HDல் அனுப்பி வந்த நிலையில், இனி வீடியோவையும் HDல் அனுப்பலாம்.

மேலும், ஒரு மொபைல் போனில் பல வாட்ஸ்அப் கணக்குகளை பயன்படுத்தும் அம்சத்தை விரைவில் கொண்டுவர உள்ளதாகவும், இதற்கிடையில் வேறு சில அம்சங்களையும் சோதித்து வருவதாகவும் வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.