உலகம் முழுவதுமே பில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் பயனர்களுடைய வசதிக்காக whatsapp பல்வேறு சேவைகளையும், அப்டேட்டுகளையும் வழங்கி வருகிறது. கல்வி, தொழில், பண பரிமாற்றும் முதலான அனைத்து தேவைகளுக்கும் whatsapp பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பயனாளர்களுக்கு ஒரு புது வசதியை கொண்டுவந்துள்ளது .

அதாவது வாட்ஸ் அப் நிறுவனம் பிராட்காஸ்ட் சேனல்கள் என்ற புதிய வசதியை சமீபத்தில் அறிமுகம் செய்துள்ளது. இந்த சேனல்களில் செய்திகள் தேடல் அம்சம் உள்ளது. இது ஒரு வழி சேனல் போன்றது. இதன் மூலம் ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான செய்திகளை அனுப்ப முடியும். இந்த சேனல்கள் மூலம் நீங்கள் விரும்பும் நபர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து விரும்பிய புதுப்பிப்புகளைப் பெறலாம்.