இளைஞர்களின் கனவு பைக்கான ‘யமஹா R15’ (Yamaha R15) ஸ்போர்ட்ஸ் பைக்கை, ‘மினிகோ’ சரக்கு வாகனமாக மாற்றி பெண் ஒருவர் செய்துள்ள வினோதமான வடிவமைப்பு சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி நெட்டிசன்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கல்லூரி இளைஞர்கள் முதல் பந்தய வீரர்கள் வரை அனைவரும் அதன் வேகம் மற்றும் ஸ்டைலான தோற்றத்திற்காக விரும்பும் யமஹா பைக்கின் பின் பகுதியில், ‘குட்டி யானை’ வாகனங்களில் இருப்பது போன்ற ஒரு பெரிய இரும்பு லோடிங் டிராலியை அந்தப் பெண் இணைத்துள்ளார். அதிவேக ஸ்போர்ட்ஸ் பைக்கையும், வியாபாரப் பயன்பாட்டையும் ஒன்றாக இணைத்து ‘யமஹா R15 மினி கார்கோ’ எனப் பெயரிடத்தக்க வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வாகனம், கனரகப் பொருட்களை ஏற்றிக்கொண்டு சாலையில் மற்ற வாகனங்களை முந்திச் செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.
இந்தியர்களின் இந்த வினோத பொறியியல் திறமையைக் கண்டு வியந்த சமூக வலைதளவாசிகள், “யமஹா பைக்கை எமராஜா பைக்காக மாற்றிவிட்டார்கள்” என்றும், “இந்தத் திறமை இவ்வளவு நாள் எங்கே ஒளிந்திருந்தது?” என்றும் வேடிக்கையாகக் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த புதுமையான முயற்சியை ஒருபுறம் நெட்டிசன்கள் பாராட்டி தீர்த்தாலும், மறுபுறம் அதிவேக ஸ்போர்ட்ஸ் பைக்கில் இப்படி ஆபத்தான மாற்றங்களைச் செய்வது சாலை பாதுகாப்பு விதிகளுக்கு எதிரானது அல்லவா என்ற கேள்வியையும் நெட்டிசன்கள் எழுப்பியுள்ளனர். எது எப்படியோ, “ஆசை ஒருபுறம் இருந்தாலும், பிழைப்பு முக்கியம் அமைச்சரே!” என்ற பாணியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மினி கார்கோ பைக் தற்போது இணையத்தில் செம டிரெண்டாகி வருகிறது.
https://www.instagram.com/reel/DYNBQOCTy9f/?igsh=MXc5YXJ6YThvaHZvZA==
