விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கோணம்பட்டி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில், தங்களுக்கு அரசு வழங்கும் ‘இலவச பேருந்து’ வசதி இல்லை என்றாலும் பரவாயில்லை, தங்களது ஊரான கோणம்பட்டி பகுதிக்கு வந்து செல்ல முறையான பேருந்து வசதி மட்டுமாவது செய்து தருமாறு தமிழக அரசுக்கு உருக்கமான கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வீடியோ இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், சிவகாசி சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான கீர்த்தனா அவர்களின் கவனத்திற்குச் சென்றது.
மக்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிய அமைச்சர் கீர்த்தனா 🥹❤️ pic.twitter.com/uNWKkEH6hc
— Vijay Social Teamⱽˢᵀ (@TST_Offcl) May 28, 2026
இதையடுத்து, அமைச்சர் கீர்த்தனா உடனடி நடவடிக்கை எடுத்து தற்போது கோணம்பட்டி பகுதிக்கு புதிய அரசு பேருந்து வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். தங்களது ஊருக்குள் முதன்முறையாக நுழைந்த அரசு பேருந்தை அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் மலர் தூவியும், தேங்காய் உடைத்தும், ஆரத்தி எடுத்தும் உற்சாகமாகக் கொண்டாடி வரவேற்றனர். மேலும், இந்த நியாயமான கோரிக்கையை முதன்முதலில் வீடியோ மூலம் முன்வைத்த அந்தப் பெண் உட்பட கிராம மக்கள் பலரும், தங்களது நீண்ட நாள் கனவை நனவாக்கிய அமைச்சருக்கு நன்றி தெரிவித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய காணொளி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
