எகிப்து தேசிய கால்பந்து அணியின் பயிற்சியாளர் ஹொசாம் ஹசனின் இரு மனைவிகளுக்கு இடையே ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட பயங்கரமான மோதலும், அதனைத் தொடர்ந்து பயிற்சியாளர் மயங்கி விழுந்த சம்பவமும் தற்போது இணையத்தில் தீயாகப் பரவி வருகிறது.
எகிப்தின் வடக்குக் கடற்கரைப் பகுதியான போர்டோ மெரினாவில் உள்ள ஒரு ஹோட்டலில், ஹொசாம் ஹசனின் முதல் மனைவி ஹொவைதா அல்-கர்பாவிக்கும், மற்றொரு மனைவியான தீனா “டான் ஆடம்” முஸ்தபாவுக்கும் இடையே திடீரென கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சண்டை முற்றி இரு பெண்களும் ஒருவரையொருவர் முடி பிடித்து இழுத்துத் தாக்கித் கொள்ளும் அளவிற்கு மோதல் வெடித்துள்ளது. அங்கு கூடினோர் மற்றும் பாதுகாப்பு ஊழியர்கள் தலையிட்டு அவர்களை விலக்கிவிட்டனர். இந்தச் சண்டையைத் தடுத்து நிறுத்த முயன்ற பயிற்சியாளர் ஹொசாம் ஹசன், அங்கு ஏற்பட்ட கடுமையான குழப்பம் மற்றும் அதிர்ச்சி காரணமாக திடீரெனச் சாலையில் மயங்கி விழுந்தார்.உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட ஹசன், தீவிர சிகிச்சைக்குப் பிறகு தற்போது ஆபத்தான கட்டத்தைத் தாண்டி நலமுடன் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இந்தச் சம்பவத்தால் அவருக்குப் பெரிய அளவில் உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தீனா தரப்பு வழக்கறிஞர், தனது கட்சிக்காரர் மீது திட்டமிட்டத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இதற்கிடையே, ஹசன் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன; எனினும் இதுகுறித்து இரு தரப்பிலும் முரணான கருத்துக்களே நிலவுகின்றன.
En Égypte, un violent différend a éclaté entre… les deux femmes du sélectionneur égyptien, Hossam Hassan. 🇪🇬😳
Le conflit a dégénéré en échauffourée avec coups et tirage de cheveux, avant que des jeunes et des passages n’interviennent dans la bagarre. pic.twitter.com/pvRUSMtAsD
— Instant Foot ⚽️ (@lnstantFoot) August 15, 2026
“>
சமீபத்தில் ஹொசாம் ஹசன் தலைமையிலான எகிப்து கால்பந்து அணி, 2026 ஃபிஃபா உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி முதல்முறையாக நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறி வரலாற்றுச் சாதனை படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. விளையாட்டு உலகைக் கொண்டாடிய அதே பயிற்சியாளர், தற்போது தனது குடும்பத் தகராறு காரணமாக உலகளவில் பேசுபொருளாகியுள்ளார்.
