கென்யா நாட்டை சேர்ந்தவர் மேக்கன்சி. இவர் 2003 ஆம் வருடம் குட் நியூஸ் இன்டர்நேஷனல் என்ற பெயரில் கிறிஸ்தவ மத அமைப்பு என்று உருவாக்கினார். இதன் மூலமாக ஏராளமான பிரச்சாரங்களை செய்து கோடிக்கணக்கில் சம்பாதித்தார். அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில்  கடந்த ஜனவரி மாதம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் இயேசுவை பார்க்க விரும்புவர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தினால் தான் அவரை காட்டுவேன் என்று நோட்டீஸ் அடித்து ஓட்டினாராம்.

இதை நம்பியும் ஏராளமானவர்கள் பணம் கொடுத்தார்கள். குறிப்பிட்ட நாளில் அவர்கள் 400 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களை காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்ற மேக்கன்சி நான் சொல்லும் நாள் வரை உணவு நீரின்றி பட்டினியாக கிடந்தால் கடவுளை பார்க்கலாம் என்று கூறியுள்ளார். இதை நம்பி அவர்களும் பட்டினி கிடந்து சில நாட்களுக்கு மேல் பசி தாங்க முடியாமல் பலர் அங்கிருந்து சென்றுள்ளனர். ஆனால் அடியாட்கள் அவர்களை தடுத்து நிறுத்தி உள்ளனர் .

இந்த கொடூர சம்பவத்தில் அந்த 400 பேறும் உயிரிழந்துள்ளனர் .இதை அடுத்து அவர்கள் அங்குள்ள இடுகாட்டில் புதைக்கப்பட்டுள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்ததில் காவல்துறை விசாரணையிள் 400 பேரை உடல்களும் தோண்டி எடுக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது. இதையடுத்து 400 அப்பாவி மக்களை ஏமாற்றி கொலை செய்த அவருக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என்று கன்னிய நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.