ஜப்பானில் மூன்று ஆண்டுகளில் 27 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலி அவசர அழைப்புகளை செய்த பெண் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஹிரோகோ ஹடகாமி என்ற 51 வயது மிக்க பெண் ஒருவர் தனிமை காரணமாக இந்த சாகசத்தில் ஈடுபட்டுள்ளார்.. அந்தப் பெண் டோக்கியோவின் கிழக்கே உள்ள ஒரு பகுதியில் வசித்து வருகிறார். உள்ளூர் தீயணைப்பு படையினரின் மதிப்பு மிக்க நேரத்தை வீணடிப்பதாகவும் போலி அவசர அழைப்புகள் மூலமாக அவர்களின் செயல்பாடுகளுக்கு இடையூறு விளைவிப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தான் தனிமையில் இருப்பதாகவும் தன்னை யாராவது கவனித்துக் கொள்ள வேண்டும் என்றும் அந்த பெண் கூறியுள்ளார். அனைவரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் 2700 க்கும் மேற்பட்ட அவசர அழைப்புகளை அவர் தொடர்பு கொண்டு உள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக வயிற்று வலி மற்றும் கால் வலி என பல புகார்களை கூறி ஆம்புலன்ஸ்களை அனுப்புமாறு பலமுறை அழைப்பு விடுத்துள்ளார். இதனை தொடர்ந்து தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறையினர் பலமுறை எச்சரித்தும் அந்தப் பெண் தனது தனிமையை கடப்பதற்கு அவசர அழைப்புகளை தொடர்பு கொண்டு உள்ளார். தற்போது அந்தப் பெண் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்தப் பெண் சொன்ன காரணம் அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.