தேர்தல் நெருங்கிவிட்டாலே பிரதமர் மோடிக்குத் தமிழகத்தின் மீது டன் கணக்கில் பாசம் பொங்கி வருவதாகச் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். திருச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், பிரதமர் மோடியின் தமிழக பாசம் என்பது வெறும் நாடகம் என்று சாடியுள்ளார்.
குறிப்பாக, அமெரிக்க விவசாயப் பொருட்களை இந்தியாவில் தடையின்றி விற்பனை செய்யப் பிரதமர் அனுமதி வழங்கியதன் விளைவாகத்தான், இன்று நாடு முழுவதும் சமையல் எரிவாயு மற்றும் பெட்ரோல் தட்டுப்பாடு தலைவிரித்தாடுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த நெருக்கடிக்குக் காரணமான அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்குப் பிரதமர் மோடி ஆதரவாகச் செயல்படுவதாகவும், அவர்களுக்கு ‘வெண்சாமரம்’ வீசிக் கொண்டிருப்பதாகவும் ரகுபதி ஆக்ரோஷமாகப் பேசியுள்ளார். அமைச்சரின் இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் அனலைக் கிளப்பியுள்ளது.
