திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் தனுஷ் கூறிய “வயசுக்கும் வாழ்ற வாழ்க்கைக்கும் சம்பந்தமே இல்லை” என்ற வசனம், சமீபத்தில் இணையத்தில் வைரலாகி வரும் ஒரு மனம் கவர்ந்த வீடியோவுடன் மீண்டும் பேசப்பட்டு வருகிறது.

35 முதல் 40 வயதுக்குள் உள்ள நண்பர்கள் குழுவொன்று தாம்பரம் முதல் பீச் செல்லும் ரயிலில் தினமும் ஒன்றாகப் பயணம் செய்கின்றனர். அவர்கள் தங்கள் தினசரி வாழ்க்கையின் அழுத்தங்களையும் கவலைகளையும் மறக்க, ரயிலில் பாடல்களைப் பாடி மகிழும் பழக்கம் கொண்டுள்ளனர்.

அவர்கள் பாடும் போது அவர்களது குழுக்கு மட்டுமல்லாமல் சுற்றியுள்ள பயணிகளுக்கும் மகிழ்ச்சியைப் பரப்பி, அந்தச் சில நிமிடங்கள் ரயிலையே ஒரு சிறிய திருவிழா சூழலாக்குகின்றன.

“>

 

இந்த வீடியோ இணையத்தில் வெளிவந்ததும், நெட்டிசன்கள் அதனை பெரிதும் பாராட்டி வருகின்றனர். “இவர்களின் பாடல்களை கேட்கும் போதே நம்முடைய கவலைகளும் மறைந்து விடுகிறது”, “இவர்கள் உண்மையிலேயே நேரில் உள்ள ‘ஹீரோக்கள்’” என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

வயது எதுவாக இருந்தாலும் மனம் இளமையாக இருந்தால் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழலாம் என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக இந்த ரயில் நண்பர்கள் குழு சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்படுகின்றனர்.