இன்றைய அவசர உலகில் மனிதநேயமும் மனித நேசமும் அரிதாகி வரும் சூழலில், தாய்லாந்து நாட்டின் பேங்காக்கில் வாழும் ஒரு டேக்ஸி ஓட்டுநரின் செயல் ஒட்டுமொத்த உலகத்தின் கவனத்தையும் ஈர்த்து நெஞ்சை நெகிழ வைத்துள்ளது.
மேலும் தன் காரில் ஏறும் பயணிகளுக்கு வெறுமனே பயணச் சேவையை மட்டும் வழங்காமல், அவர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை இலவசமாக வழங்கி ஒரு சிறிய ‘மினி மார்ட்’ போல தன் வாகனத்தையே மாற்றியுள்ளார் இந்த மனிதநேயமிக்க ஓட்டுநர். சுயநலமும் பண ஆசையும் நிறைந்த இந்த சமூகத்தில், சக மனிதர்களின் தேவையை உணர்ந்து அவர் செய்து வரும் இந்தச் சேவை பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
அவரது டேக்ஸிக்குள் ஏறி அமரும் பயணிகள் தாகத்திற்குத் தண்ணீர், பசிக்குச் சிறிய நொறுக்குத் தீனிகள், கைபேசி சார்ஜர்கள், முதலுதவி மருந்துகள் மற்றும் முகக்கவசங்கள் எனப் பல பொருட்களை இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் காரின் பின்புறத்தில் அழகாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
இதனால் நீண்ட தூரப் பயணங்களால் சோர்வடையும் பயணிகளும், அவசர வேலையாகச் செல்பவர்களும் இந்தச் சலுகைகளால் பெரும் நிம்மதியும் மகிழ்ச்சியும் அடைகின்றனர். இதன் மூலம் கிடைக்கும் லாபத்தை விட, தன் காரில் பயணிக்கும் மக்களின் முகத்தில் தெரியும் புன்னகையும் நிம்மதியும்தான் தனக்குக் கிடைக்கும் மிகப்பெரிய ஊதியம் என்று அந்த ஓட்டுநர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறார்.
இந்த அபூர்வமான டேக்ஸிப் பயணத்தைப் பதிவு செய்த பயணி ஒருவர் அதைச் சமூக வலைதளங்களில் வெளியிட, அந்த வீடியோ நொடிப் பொழுதில் உலகளவில் வைரலானது. ஆயிரக்கணக்கான இணையவாசிகள் இந்த ஓட்டுநரின் பரந்த மனதையும், பிறருக்கு உதவும் எண்ணத்தையும் மனதாரப் பாராட்டித் தங்களது கமெண்ட்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் “வாழ்க்கையில் எவ்வளவு சம்பாதிக்கிறோம் என்பதை விட, எவ்வளவு பேரின் அன்பைச் சம்பாதிக்கிறோம் என்பதே முக்கியம்” என்பதைத் தன் எளிமையான சேவையின் மூலம் இந்த பேங்காக் டேக்ஸி ஓட்டுநர் உலகிற்கு உணர்த்தியுள்ளார்.
See this Instagram video by @floraandnote https://t.co/wqjwG523ha
“>
