தமிழகத்தில் கடந்த சில நாட்களாக சீமான் குரல் தான் ஒலித்துக் கொண்டிருக்கிறது. பெரியார் குறித்து சர்ச்சை கருத்துக்களை பேசி திமுகவை வேண்டுமென்றே வம்புக்கு இழுத்து வருகிறார். சீமானின் பெரியார் குறித்த பேச்சுக்கு திமுகவினர் மட்டுமல்லாமல் மற்ற கட்சியை சேர்ந்த அரசியல் பிரபலங்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இப்படியான நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மறைந்த தலைவர் புகழுக்கு எந்த வகையிலும் அவப்பெயர் ஏற்படுத்துவது என்பது பயனற்ற செயல்.

பெரியாரைத் தொடர்ந்து இழிவு படுத்துவதை ஒருபோதும் அதிமுக அனுமதிக்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். பெரியார் பற்றி சீமான் பேசிக் கொண்டிருப்பதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். ஒருவேளை தொடர்ந்து பேசினால் அரசியலில் தனிமைப்படுத்தப்படுவார். இன்று நாட்டில் விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் பாலியல் வன்கொடுமை விவகாரம் என்று எத்தனையோ பிரச்சனைகள் இருக்கும்போது அதைப் பற்றி பேசாமல் பெரியார் குறித்து சீமான் பேசுவது மக்களை திசை திருப்பும் செயலாக உள்ளது. பெரியார் சொல்லாததை எல்லாம் சொல்லியதாக கூறி மக்களை திசை திருப்பக் கூடிய அவசியம் சீமானுக்கு ஏன் வந்தது என்று ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.