மத்தியப் பிரதேச மாநிலத்தின் மௌகஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஒரு சோதனைச் சாவடி அருகே, லாரி ஓட்டுநரிடம் மிரட்டிப் பணம் பறிக்க முயன்ற நபருக்கு நேர்ந்த விபரீதம் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. லாரியை வழிமறித்துப் பணம் கேட்ட அந்த நபர், ஓட்டுநர் வண்டியை நிறுத்தாததால் அடம் பிடித்து லாரியின் முன்பக்கத்தில் ஏறித் தொற்றிக்கொண்டார்.
ஆனால், பயந்து போய் பணத்தைக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஓட்டுநர், அந்த நபர் தொங்கிக் கொண்டிருப்பதைப் பொருட்படுத்தாமல் லாரியைத் தொடர்ந்து ஓட்டிச் சென்றுள்ளார். லாரி நிற்காமல் வேகமாகச் சென்றதால் அதிர்ச்சியடைந்த அந்தப் பணம் பறிக்கும் நபர், கீழே விழுந்துவிடுவோம் என்ற பயத்தில் லாரியை நிறுத்துமாறு கதறியபடி பல கிலோமீட்டர் தூரம் ஆபத்தான முறையில் தொங்கியபடியே பயணித்துள்ளார்.
A video from the Hanumana check post in #Mauganj district of #MadhyaPradesh has gone viral on social media, showing a man attempting to extort money from a truck driver by climbing onto his vehicle.
Instead of giving in, the driver continued driving while the extortionist clung… pic.twitter.com/HZj5fxRPIk
— Hate Detector 🔍 (@HateDetectors) December 23, 2025
இந்தத் திக் திக் காட்சிகள் பின்னால் வந்த வாகனத்தில் இருந்தவர்களால் படம்பிடிக்கப்பட்டு எக்ஸ் (X) தளத்தில் பகிரப்பட்டுள்ளது. இறுதியில் ஒரு பாதுகாப்பான இடத்தில் ஓட்டுநர் லாரியை நிறுத்தியுள்ளார். சட்டவிரோதமாகப் பணம் பறிக்க முயன்றவருக்கு ஓட்டுநர் கொடுத்த இந்த “தகுந்த பாடம்” தற்போது சமூக வலைதளங்களில் விவாதமாக மாறியுள்ளது.
