கிரேட்டர் நொய்டாவில் நடுரோட்டில் திடீரென கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அந்த வாக்குவாதத்தின் போது ஒரு ஆணையும் பெண்ணையும் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கோபத்தில் கன்னத்தில் அறைந்து விட்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து அந்த கான்ஸ்டபிளை பணியிடை நீக்கம் செய்துள்ளனர்.

அதாவது ஒரு விபத்து தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று கான்ஸ்டபிள் பூபேந்திர மாலிக் அந்த ஆணையும் பெண்ணையும் வரவழைத்துள்ளார். அவர்களிடம் விசாரணை நடத்தும் போது திடீரென வாக்குவாதம் ஏற்பட கன்னத்தில் அறைந்துவிட்டார்.

முதலில் அந்த வாலிபரை அவர் கன்னத்தில் அடித்த நிலையில் அதனை தடுக்க முயன்ற பெண்ணையும் அடித்துவிட்டார். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுத்ததாக போலீசார் விளக்கம் கொடுத்துள்ளனர்.