இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  தனது 70வது பிறந்தநாளை முன்னிட்டு CM ஸ்டாலின் சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்தினார். இரண்டு பேரின் நினைவிடங்களிலும், மலர் தூவி, மலர் வளையம் வைத்து வணங்கினார். உடன் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், பொன்முடி, செயலாளர் துரைமுருகன் உள்ளிட்டோர் இருந்தனர். ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று மாலை நந்தனம் YMCA மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

இந்நிலையில், இன்று தன்னை சந்திக்க வரும் அனைவருக்கும் மஞ்சள் பையில் மரக்கன்று ஒன்றை வழங்குகிறார். கடந்த காலங்களில் தனது பிறந்தநாள் அன்று சந்திக்க வருபவர்களுக்கு பணம் கொடுத்த நிலையில், இந்த முறை சுற்றுச்சூழலை வலியுறுத்தும் வகையில் மரக்கன்று வழங்குகிறார்.