தமிழக பாஜக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய கட்சியின் தலைவர் அண்ணாமலை,  இது மிகப்பெரிய ஆச்சர்யம். இந்த சாமானிய மனிதன் ( நான் ) கவுன்சிலர் கிடையாது,  பஞ்சாயத்து தலைவர் கிடையாது, எம்எல்ஏ கிடையாது,  எம்பி கிடையாது. சாதாரண ஒரு கட்சியில் தொண்டராக ஒரு பொறுப்பில் வேலை பார்க்கின்றேன். அப்ப நான் ஆச்சரியமாக ஒருத்தரிடம் கேட்டேன். என்னங்க இது ரொம்ப ஆச்சரியமா இருக்கு…

நாங்க தானே எப்பவும் கேள்வி கேட்போம். இப்ப நீங்க கேக்குறீங்கன்னு ?  அந்த அளவுக்கு எங்களுக்கு மமதை வந்திருக்கிறது. அந்த அளவுக்கு நாங்கள் மமதையிதில் ஊறிப் போயிட்டோம். என்ன கேள்வி வேணாலும் கேட்க வேண்டிய அளவிற்கு எங்களுக்கு தைரியம் இருக்கு. நாங்கள் ஐந்து ஊடகங்கள் வைத்திருக்கிறோம். டிவி நடத்துகிறோம், பத்திரிக்கை நடத்துறோம், என்ன வேணாலும் எழுதுவோம். அந்த அடிப்படையில் நாங்கள் என்ன வேணாலும் கேட்பாயா ? அதற்குத்தான் நான் சொல்லியிருந்தேன்.

75 ஆண்டுகால இந்திய அரசியலில் யாரும் செய்யாததை நான் செய்யப் போகிறேன். இந்த ஆட்சிக்கு பில்லு மட்டும் இல்லை,  நான் போலீஸ் வேலையில் எப்போ சேர்ந்தனோ…  2010, இன்றைக்கு 2022. 13 ஆண்டுகள் நான் சம்பாதித்த எல்லாத்தையும் பொதுமக்களுக்கு ஓபன் பண்ணி காட்டுறேன். எல்லா பேங்க் அக்கவுண்ட் டீடைல்ஸ் என தெரிவித்தார்.