சுத்தானந்தா ஆசிரமத்தில் நடைபெற்ற “அரசியல் ஆளுமை மற்றும் தலைமைத்துவம்” குறித்த பயிலரங்கில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் அண்ணாமலை உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், “இன்றைய அரசியலில் தலைமைத்துவம் என்பது ஆழமான உள்நோக்கம், கடமை, கண்ணியம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் தற்போது ‘இன்று வருவோர், போவோர் எல்லாம் தலைவராகி விடுகின்றனர்’ என்ற நிலை உருவாகியுள்ளது” என குறிப்பிட்டார்.

மேலும், தேர்தல்களில் வாக்காளர்கள் எவ்வாறு தங்கள் முடிவுகளை எடுக்கின்றனர் என்பது குறித்து அவர் விளக்கினார். “இப்போது சுமார் 40% வாக்காளர்கள், தேர்தலுக்கு ஒரு வாரம் முன்னரே தான் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை முடிவு செய்கிறார்கள். முன்பாக இருந்தது போல் கட்சியின் சித்தாந்தத்தை வைத்து மட்டும் மக்கள் ஓட்டுப் போடவில்லை.

பல அம்சங்களை, வேட்பாளர் யார், அவர் செயல்பாடு என்ன, நேர்மை இருக்கிறதா போன்றவற்றை கருத்தில் கொண்டு தான் முடிவெடுக்கின்றனர். அதற்கேற்ப, அரசியல் தலைவர்கள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டிய காலகட்டம் இது” என அவர் வலியுறுத்தினார்.