சுத்தானந்தா ஆசிரமத்தில் நடைபெற்ற “அரசியல் ஆளுமை மற்றும் தலைமைத்துவம்” குறித்து பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் அண்ணாமலை உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “இன்றைய அரசியலில் தலைவர்கள் மக்கள் கவனத்தை ஈர்க்க எவ்வளவோ அதீத முயற்சிகளை செய்கிறார்கள்.

ஒருவைபில் ஒரு தலைவர் மாடுகளை நிறுத்தி பேசுகிறார், மறுபுறம் இன்னொரு தலைவர் மரத்தில் ஏறுகிறார். இது எல்லாம் தவறு என நாங்கள் சொல்லவில்லை. ஆனால் இவை மக்கள் எதிர்பார்ப்பின் வெளிப்பாடுகள் என்பதை அரசியல் தலைவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்” என தெரிவித்தார்.

மேலும், “இன்றைய வாக்காளர்கள் வெறும் சின்னம், சித்தாந்தம் பார்த்து ஓட்டு போடுவதில்லை. அவர்கள் வேட்பாளர்களின் செயல்பாடு, நேர்மை, தைரியம் போன்றவற்றை பார்க்கிறார்கள். அதனால்தான் மக்கள் வித்தியாசமாக சிந்தித்து மாறுகிறார்கள். இந்த மனநிலையை அரசியல் தலைவர்கள் புரிந்து கொண்டு தங்களை மாற்றிக் கொள்ளாவிட்டால், அவர்கள் பின்தங்க நேரிடும்” என அண்ணாமலை எச்சரிக்கை விடுத்தார். அவரது பேச்சு , தற்போதைய தமிழக அரசியல் சூழ்நிலையை சுட்டிக்காட்டும் வகையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.