கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த ஐபிஎல் 2026 சீசன் இன்று பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாகத் தொடங்குகிறது. கடந்த சீசனில் முதல்முறையாகக் கோப்பையை வென்று சாதனை படைத்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி, இன்று தனது முதல் ஆட்டத்தில் பலம் வாய்ந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணியை எதிர்கொள்கிறது.

​இருப்பினும், இந்த ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சிகள் (Opening Ceremony) எதுவும் நடைபெறாது என பிசிசிஐ அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஆர்சிபி சாம்பியன் பட்டம் வென்ற கொண்டாட்டத்தின் போது பெங்களூருவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர்.

அவர்களின் நினைவாகவும், அந்தத் துயரத்திற்கு மதிப்பளிக்கும் விதமாகவும் தொடக்க விழாவை ரத்து செய்துள்ளது பிசிசிஐ. மேலும், ஸ்டேடியத்தில் 11 இருக்கைகளை அந்த ரசிகர்களுக்காக ஆர்சிபி நிர்வாகம் காலியாக விட்டு அஞ்சலி செலுத்தியுள்ளது.