ஐடிஐ-யில் சேருவதற்கு 8, 10 -ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் இன்று மே 24 முதல் ஜூன் 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையதளத்தில் பதிவு செய்ய வசதி இல்லாதவர்கள் தமிழகம் முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் 147 உதவி மையங்கள் வாயிலாக சேர்க்கை பதிவை மேற்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதில் சந்தேகம் ஏதும் ஏற்பட்டால் 9499055612 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்புக்கொண்டு கேட்டறியலாம்.