நேற்று தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் சென்னையிலிருந்து வெளிநாடு புறப்பட்டார். சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நாடுகளில் முதல்வர் ஸ்டாலின் 9 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழகத்திற்கு முதலீடுகள் ஈர்க்க சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

இதனிடையே அரசு பயணமாக முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டு சுற்றுலாப் பயணம் செல்வதாக இபிஎஸ் விமர்சித்த நிலையில், அதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்துள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது “அதிமுக ஆட்சியில் தமிழகத்திற்கு வரவேண்டிய தொழில் நிறுவனங்களை அண்டை மாநிலங்களுக்கு அனுப்பி ஆட்சி நடத்தியவர்தான் இபிஎஸ், அவர் முதல்வர் வெளிநாட்டு சுற்றுப்பயணம் பற்றி பேசலாமா?. அவருக்கு என்ன தகுதி இருக்கிறது என விமர்சித்துள்ளார்.