பொதுமக்களுடைய குறைகளை கண்டறிந்து அவர் அவற்றை உடனடியாக தீர்த்து வைப்பது தான் மக்களை தேடி மேயர் திட்டத்தின் மிக முக்கியமான நோக்கமாகும். அந்த வகையில் இந்த திட்டத்தை மக்களிடையே கொண்டு சேர்க்கும் விதமாக மேயர் பிரியா ஒவ்வொரு மண்டலமாக பொதுமக்களை சந்தித்து அவர்களுடைய குறைகளை கண்டறிந்து மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இன்று அடையாறு மண்டலத்துக்குட்பட்ட மக்களுடைய குறைகளை கேட்க இருக்கிறார்.

எல் பி சாலையில் இருக்கும் தெற்கு வட்டார துணை கமிஷனர் அலுவலகத்தில் இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை மேயர் பிரியா பொதுமக்களிடம் இருந்து நேரடியாக அவர்களுடைய மனுக்களை பெற இருக்கிறார். இதனால் அடையாறு மண்டலத்துக்கு உட்பட்ட மக்கள் தங்களுடைய பகுதி நிலவும் பிரச்சனைகள் குறித்து மேயர் பிரியாவுடம் மனு அளித்து பயன்பெறுமாறு மாநகராட்சி சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேயரிடம் கொடுக்க முடிவதால் மக்களை தேடி மேயர் திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக சென்னைவாசிகள் தெரிவித்துள்ளனர்.