இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை விரும்புகின்றனர். மற்ற போக்குவரத்து களுடன் ஒப்பிடும்போது குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும் என்பதால் பலரும் ரயில் பயணத்தை விரும்புகின்றனர். அப்படி ரயிலில் பயணிக்கும் போது ரயில்வே விதைகளை பயணிகள் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதாவது ரயிலில் வெளியூர் செல்லும் பயணிகள் கட்டணம் இன்றியும் கட்டணம் செலுத்தியும் பேக், சூட்கேஸ் போன்ற லக்கேஜ் உடன் எடுத்துச் செல்ல சில விதிகள் உள்ளது. ஏசி பட்டியில் பயணிப்போர் கட்டணம் என்று 70 கிலோ வரை லக்கேஜ் எடுத்து செல்லலாம்.

இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டியில் 40 கிலோ வரையிலும், இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டியில் 35 கிலோ வரையிலும் லக்கேஜ் எடுத்து செல்லலாம். ரயில் பயணத்தில் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி கையோடு கூடுதல் லக்கேஜ் எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஏசி வகுப்பு பெட்டி பயணிகள் 150 கிலோ வரை லக்கேஜ் எடுத்து செல்லலாம். இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டியில் 80 கிலோ லக்கேஜ், இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டியில் 70 கிலோ லக்கேஜ் கொண்டு செல்லலாம். இதையும் விட அதிகமான எடையில் லக்கேஜ் எடுத்து செல்ல அனுமதி இல்லை.