பீகார் மாநிலத்தில் NDA கூட்டணி வேட்பாளருக்கு எதிராக சுயேட்ச்சையாக களமிறங்கிய போஜ்புரி நடிகர் பவன் சிங் பாஜகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். வங்கத்தின் அசான்சோல் தொகுதியில் போட்டியிட இருந்த நிலையில் அவர் பாடிய திரைப்பட பாடல்கள் பெண்களை இழிவு படுத்தியதாக சர்ச்சையானதால் தேர்தலில் இருந்து விலகினார். இந்த நிலையில் பீகாரின் கரகாட் தொகுதியில் போட்டியிடுவதாக கூறிய நிலையில் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.