பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் குறித்து சென்னை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புரசைவாக்கத்தில் உள்ள NIA கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு ஹிந்தியில் பேசிய மர்ம நபர் மிரட்டல் விடுத்துள்ளார். என்.ஐ.ஏ அதிகாரிகள் கொடுத்த தகவலின் பேரில் சென்னை காவல்துறையினர் விசாரணை நடத்துகின்றனர்.

மக்களவை தேர்தலின் 6ஆம் கட்ட வாக்குப்பதிவு நாளை மறுதினம்  நடைபெறவுள்ளது. பிரதமர் போட்டியிடும் வாரணாசி தொகுதிக்கு 7ஆம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு வருகிற ஜுன் 1ஆம் தேதி நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.