இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வுசெய்வதால் பயணிகளின் வசதிக்காக ரயில்வே நிர்வாகம் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இருந்து செல்லும் ஏழு முக்கிய ரயில்களில் இரண்டாம் வகுப்பு பெட்டிகள் குறைக்கப்பட்ட ஏசி பெட்டிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி மன்னார்குடியிலிருந்து ராஜஸ்தான் பகவத் கி கோதி செல்லும் விரைவு ரயிலில் மூன்று இரண்டாம் வகுப்பு பெட்டிகள் மற்றும் ஒரு முன்பதிவு இல்லாத பெட்டி குறைக்கப்பட்டுள்ளது.

அதனைப் போலவே மன்னார்குடி பகத் கி கோதி ரயிலில் குறைக்கப்பட்ட இரண்டாம் வகுப்பு பெட்டிகளுக்கு பதில் நான்கு ஏசி பெட்டிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதனால் இனி இந்த ரயிலில் பதினோரு ஏசி பெட்டிகள் மற்றும் 7 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள் இருக்கும். ரயில் பெட்டிகளில் செய்யப்பட்டுள்ள புதிய மாற்றங்கள் இந்த மாதம் இறுதி அல்லது ஆகஸ்ட் மாதம் தொடக்கத்தில் அமலுக்கு வரும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும் மேலும் முக்கிய ரயில்களிலும் இரண்டாம் வகுப்பு பெட்டிகள் குறைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.