திருப்பூர் மாவட்டத்தில் கட்டிட பொறியாளர்கள் சார்பாக பில்ட் எக்ஸ்போ என்ற கட்டிட கட்டுமான பொருட்களின் கண்காட்சி வருகிற 7ஆம் தேதி திருப்பூர் காங்கேயம் சாலையில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் நடைபெறுகிறது. திருப்பூரில் முதன்முறையாக தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து கட்டுமானத்திற்கு தேவையான பொருட்கள் உள் அலங்காரம், வெளியே அலங்கார பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் தங்களை பொருட்களை காட்சிப்படுத்த இருக்கிறார்கள். இந்த கண்காட்சி பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

சுமார் 40 ஆயிரம் பார்வையாளர்களை இந்த கண்காட்சிக்கு வருகை தர இருக்கிறார்கள். பொதுவாகவே புத்தக கண்காட்சி , செல்ல பிராணிகள் கண்காட்சி, அலங்கார உடைகள் போன்றவை தான் நடைபெறும். இதில் உள்ளூர் மற்றும் வெளியூர் கைவினைப் கலைஞர்கள் தொழிலாளர்களுக்கு போன்றவர்கள் தங்களுடைய தயாரிப்பிற்கும் படைப்பிற்கும் அங்கீகாரம் கிடைக்கும் இடமாக கருதுகிறார்கள். இந்த நிலையில் முதன்முறையாக திருப்பூரில் மகாராஷ்டிரா, கர்நாடக போன்ற வெளி மாநிலங்கள் இருந்து தயாரிக்கப்பட்ட வீட்டு அலங்கார பொருட்கள் கண்காட்சி நடைபெற உள்ளது. இது பொது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.