தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பாமாயில், பருப்பு மற்றும் கோதுமை உள்ளிட்ட பொருள்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்த நிலையில் தேர்தல் நடத்தை விதி அமலில் இருப்பதால் ரேஷன் பொருட்கள் கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் இந்த மாதம் இறுதிக்குள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட் உள்ளிட்ட பொருட்கள் 100 சதவீதம் விநியோகிக்கப்படும் என்றும் அரசு விளக்கம் அளித்துள்ளது.