வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது வடகிழக்கு நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாரி தீவிர புயலாக வலுப்பெறும் என தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவாக உள்ள தீவிர புயலுக்கு ‘REMAL’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.