தமிழகத்தில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு வருகின்ற ஜூன் 16ஆம் தேதி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜூன் 14ஆம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் 16ஆம் தேதி முதல் விண்ணப்ப பதிவு தொடங்க உள்ளது. 9050 மருத்துவ இடங்களுக்கான கலந்தாய்வு ஜூன் 20ம் தேதிக்கு மேல் தொடங்க வாய்ப்புள்ளது. இதற்கு மாணவர்கள் tnmedicalselection.net/என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம்.