தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது மக்களை குளிர்விக்கும் விதமாக பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டு உள்ள நிலையில் இது புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் தமிழகத்தில் இன்று மதியத்திற்கு மேல் குமரி, நெல்லை, தென்காசி, கோவை மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, ஆகிய, மாவட்டங்களிலும், கன மழை பெய்யும் என மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அங்கு இன்று மாலைக்கு பின் பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.