வட தமிழக மற்றும் தெற்கு ஆந்திர வங்க கடலோர பகுதிகளில் நேற்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான நிலையில் இது நாளை வடகிழக்கை நோக்கி நகர்ந்து தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற மே 25ஆம் தேதி புயலாக மாறும் என்றும் மே 26 ஆம் தேதி மாலைக்குள் கடுமையான சூறாவளி புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

2024 ஆம் ஆண்டில் உருவாக உள்ள முதல் புயல் இதுவாகும். புயல் உருவாக இருப்பதால் கடலோரங்களில் வசிக்கக்கூடிய மக்களுக்கும் மீனவர்களுக்கும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாகவே பல்வேறு மாவட்டங்களிலும் கன மழை வெளுத்து வாங்கி வருவது குறிப்பிடத்தக்கது.